Thursday 22 05 2025

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

' *அனுக்கிரஹ சனைச்சரர்'* அருளிடும் திருப்புகலூர்.
#SANI #BAGAVAN #THIRUNALARU #AGNEESWARAR #THIRUPUGALUR #THIRUPUGALOOR
SUJATHA MAHALINGAM May 18 2025 ஆன்மிகம்

' *அனுக்கிரஹ சனைச்சரர்'* அருளிடும் திருப்புகலூர்.

' *அனுக்கிரஹ சனைச்சரர்'*
அருளிடும் திருப்புகலூர்.

சனைச்சரர் என்றாலே நம் அனைவருக்கும் சற்று பயம் அதிகம்தான். ஆயுட்காரகனாக விளங்கிடும் சனிபகவான் அவருக்குரிய காலங்களில் ஈவு இரக்கமின்றி ஜாதகரைத் தண்டித்து விடும் கடுமையான சுபாவம் உடையவர். அவரவர் கர்ம வினைப்பயன்படி, வறுமை, வியாதி, அவமதிப்பு போன்றவற்றை அளித்து தருமத்தினை நிலைநாட்டுவது இவரது பணி அல்லவா..?!

ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு கடப்பதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் கால அளவு 2.1/2 வருடங்கள். எனவே 12 ராசிகளையும் முழுமையாகச் சுற்றிவர அவருக்கு (12×2.1/2=30) முப்பது வருடகாலங்கள் ஆகிறது.

நளமகாராஜாவையே படாதபாடு படுத்தியவர் முன்பு நாமெல்லாம் எம்மாத்திரம்..?!
ஆனாலும், உரியகாலம் முடிந்தவுடன் சம்பந்தப்பட்டவருக்கு அதீத நன்மைகளை அளித்து அனுக்கிரஹம் செய்வதிலும் அவருக்கு இணை அவர்தான்.
நளச்சக்கரவர்த்திக்கும் அப்படிப்பட்ட அனுக்கிரஹம் கிடைத்துள்ளது என்கிறது புகலூர்த் தலபுராணம்.

ஆம்..!
நளமன்னன் திருநள்ளாறு தலத்திற்குச் செல்வதற்கு முன்பு வழிபட்ட தலம் இந்த புகலூர்தான். அவருக்கு சனியின் வாதனை முடிவுறுகிற சமயம் அது..! திருநள்ளாற்றுப்பதியில் பூரணமாக விமோசனம் கிடைக்கும் என்பதை இப்புகலூர்த் தலத்திலேயே தெய்வக்குறிப்பாக உணர்த்தினாராம் சனைச்சர மூர்த்தி. இதனால் இத்தலத்தில் அருளும் சனிபகவானுக்கு 'அனுக்கிரஹ சனைச்சரர்' என்கிற திருநாமம் வழங்கப்பெறுகிறது. இங்கு சனைச்சர பகவானுடன் அவரை வழிபட்ட நளராஜனின் கற்றிருமேனியும் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது‌ .

இன்றளவும் *ஏழரைச்சனி* , *அஷ்டமச்சனி* , *அர்த்தாஷ்டமச்சனி* போன்ற சனி வாதனைகளிலிருந்து விடுபட *திருநள்ளாறு* செல்பவர்கள் அதற்கு முன்பாக திருப்புகலூர் அனுக்கிரஹ சனிபகவானை வணங்கி தீபமேற்றி வழிபட்டுவிட்டு செல்வது வழமையாக இருக்கிறது.

இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு அருள் செய்யும்படி சனைச்சரபகவானிடம் நளமகாராஜாவே சிபாரிசு செய்திடுவதாக தொன்றுதொட்ட நம்பிக்கை நிலவுகிறது.

-Sujatha Mali
குருவே சரணம்
(மஹாகும்பாபிஷேகம் - 05.06.2025)
*திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம்* பாத்தியத்திற்கு உட்பட்ட பூம்புகலூர்.

சதய நட்சத்திரத்தவர்கள் வழிபடவேண்டிய தலம் - *அப்பர் பெருமான் முக்தித்தலம்* வாஸ்து தோஷங்களுக்கான பிரார்த்தனைத்தலம் -
*ஸ்ரீ சூளிகாம்பாள்* என்கிற *கருந்தாழ்குழலாள்* சமேத *ஸ்ரீஅக்னீஸ்வரசுவாமி* தேவஸ்தானம்
*திருப்புகலூர்* . 
See less