PON PANEERSELVAM
May 18 2025
செய்திகள்
வஞ்சிக்கப்படும் காரைக்கால் கண்டுகொள்ளாத
புதுச்சேரி அரசு...
------------------------------------------------------
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதி செருமாவிலங்கையில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் இருக்கும் மின் மாற்றிகள் மற்ற உபகரணங்கள் எல்லாம் தனது ஆயுள் காலத்தை இழந்து பல அய்ந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதனால் அடிக்கடி மின் தடங்கள் ஏற்படுவதால் அதனை சரி செய்வதற்கு மின்சார ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் புதுச்சேரியில் இருந்து வந்து பழுது நீக்கி செல்கிறார்கள்.
அங்குள்ள நிலைமை என்ன வென்று மக்களுக்கு தெரிவதில்லை. அதனால் மின்சாரம் நின்றவுடன் பொதுமக்களிடம் ஏச்சு, பேச்சுகளை வாங்கி வருகின்றனர் மின்சார ஊழியர்கள் பாவம்.
இதனை புதுப்பிக்க வேண்டும் அல்லது மாற்று இடத்தில் புதிய துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என பல வருடங்களாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் காரைக்காலுக்கு மின்துறை சம்பந்தமாக எந்த நிதியும் ஒதுக்கவில்லை. காரைக்காலை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து விட்டார்கள்.
ஆனால் புதுச்சேரி தவளக்குப்பத்தில் ரூபாய் 92 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க புதுச்சேரியின் மாண்புமிகு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
காரைக்காலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தான் இருக்கிறது.
நாங்களும் வரி கொடுக்குறோம், வாக்களிக்கிறோம் பிறகு ஏன் காரைக்காலை புதுவை அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையோடு வஞ்சித்து புறக்கணித்து வருகிறது என்று தெரியவில்லை?
பழுதடைந்து போய் இருக்கும் சுரக்குடி துணை மின் நிலையத்தை புதுப்பிக்க வேண்டும்
அல்லது புதிதாக வேறு இடத்தில் துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும்.
காரைக்கால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா ?