Saturday 18 05 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அம்பகரத்தூரில்  சாராய கிக்கில்    ஆளே அம்பேல்!
சாராய கிக்கில் ஆளே அம்பேல்!
ஆதர்ஷ்.டி.எம். Oct 05 2023 சற்றுமுன்

அம்பகரத்தூரில் சாராய கிக்கில் ஆளே அம்பேல்!

அம்பகரத்தூரில்

சாராய கிக்கில்  

ஆளே அம்பேல்!


அம்பகரத்தூரில் சாராயம் குடித்த தொழிலாளி கடை வாசலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்(30), கூலித் தொழிலாளியான இவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்த மனைவி உஷா, வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

தனது தாயார் ருக்மணியுடன் வாழ்ந்த அய்யப்பன் குடிப் பழக்கத்துக்கு ஆளானார். அதிகக்குடியால் மஞ்சள் காமாலைக்கு ஆளான அய்யப்பன், சிகிச்சையும் பெற்று வந்தார். நேற்று முன்தினம் அம்பகரத்தூர் சாராயக்கடையில் சாராயம் குடித்த அய்யப்பன் திடீரென சுருண்டு விழுந்தார்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து ஐயப்பனை எழுப்ப அவர் திறந்திருந்தது தெரிந்தது. இதுகுறித்து ஐயப்பனின் சகோதரர் சிவமூர்த்தி(55) திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகைரளித்தார். விரைந்து சென்ற போலீசார் ஐயப்பனின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.