Saturday 18 05 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பாடையின் முன் குத்தாட்டம்  தடுத்ததால் கும்மாங்குத்து
பாடையின் முன் குத்தாட்டம் தடுத்ததால் கும்மாங்குத்து
இரா.நவீன் பாரத் Oct 05 2023 சற்றுமுன்

பாடையின் முன் குத்தாட்டம் தடுத்ததால் கும்மாங்குத்து

பாடையின் முன் குத்தாட்டம்  தடுத்ததால் கும்மாங்குத்து   

கோட்டுச்சேரி தென்கரை பேட்டில் வசிப்பவர் மூவேந்தன்(30) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் இறந்த சவ ஊர்வலம் சென்றுள்ளது. அந்த ஊர்வலத்தில் பாடைக்கு முன்பாக தமிழ்ப்பாண்டியன்(21) குறுக்கே டான்ஸ் ஆடி ஊர்வலத்துக்கு இடையூறு செய்தார்.

அப்போது ''பாடையை மறித்து எதற்காக ஆடிக் கொண்டிருக்கிறாய்? பாடைக்கு வழிவிட்டு ஓரமாக அட வேண்டியதுதானே?" -என்று மூவேந்தன் கண்டித்தார். எரிச்சலடைந்த தமிழ்ப்பாண்டியன் ஆத்திரத்துடன் மூவேந்தனை கையால் அடித்து, காலால் மிதித்தார். தொடர்ந்து ஆத்திரம் அடங்காமல் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து அவரது தலையில் அடித்தார்.

இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த மூவேந்தன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து மூவேந்தன் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.