Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

காரைக்காலில் பெண்கள் இனி படகில் சென்று 200 மைல்கள் வரை மீன் பிடிக்கலாம்!
KARAIKAL FISHING PORT
THAMBI MARIMTHU Dec 21 2025 செய்திகள்

காரைக்காலில் பெண்கள் இனி படகில் சென்று 200 மைல்கள் வரை மீன் பிடிக்கலாம்!

காரைக்காலில் மத்திய அரசின் பொலிவுறு மீன்பிடித் துறைமுகத்திட்டத்தால், இந்தியாவில் அதி சிறந்த 3 மீன்பிடித் தளங்களில் ஒன்றாக காரைக்கால் விளங்கும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்தார்.
இதுவரை மீனவர்கள் தங்களுக்கான தொழில் எல்லை 50 கடல் மைல் என்ற நிலை இனி அடியோடு மாறும். மீனவர்களின் மீன்பிடி கடல் எல்லை இனி 200 கடல்மைல் தொலைவுக்கு சர்வதேச எல்லை வரை விரிவடையும் வாய்ப்பு உருவாகியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக மீனவப் பெண்கள் பலகோடி மதிப்பில் மீன்பிடிப் படகுகளில் நடுக்கடலில் மீன் வர்த்தகம் செய்கிற புரட்சித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் இதுவரை 50 கடல் மைல் என்று இருந்த மீன்பிடி இலக்கு இனி, இந்திய பெருங்கடலின் சர்வதேச எல்லை வரை 200 கடல்மைல் என்று விரிவடையும். இப்படி ஒரு வரலாற்றுத் திட்டத்தை மத்திய அரசு வரைவு செய்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனின் செயலரும், மீன்வளத்துறை செயலருமான டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
காரைக்காலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனின் வழிகாட்டலில் BOBP எனப்படும் இந்திய பெருங்கடல் திட்டத்தின் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நிபுணர்கள், அதிகாரிகள் காரைக்கால் வந்தனர்.
காமராஜர் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மீனவ கிராம பிரதிநிதிகள், பெண்கள், புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகள், மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் மணிகண்டன், முன்னிலையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மீனவர்களுடன் உரையாடினார். இதில் மீன்வள அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர். துணி நிலை ஆளுநரிடம் மீனவர்கள் தங்களுக்கு நீடிக்கிற தொழில் சார்ந்த சிக்கல்களை தெரிவித்தனர்.
துணைநிலை ஆளுநரிடம் மீனவர்கள் பேசுகையில் தங்களுக்கு இருக்கிற நடைமுறை சங்கடங்களைத் தெரிவித்தனர். தற்போது 50 கிலோமீட்டர் தொலைவு எல்லைக்குள் மீன்பிடி இலக்கு நீடிக்கிறது. இயற்கை சீற்றம், படகு பழுது, எரிபொருள் தீர்வு போன்றவற்றால் திசைமாறிச் செல்கிற மீனவர்கள் ஆந்திரா, இலங்கை கடல் எல்லைக்குள் தாக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்கால் மீனவர்களின் பலலதம் மதிப்புள்ள படகுகள், மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதில் பலகோடி பொருளிழப்பு, உயிரிழப்பும் தவிர்க்க முடியாததாக நீடிக்கிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.
அப்போது துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பேசுகையில் " மீனவர்களின் சந்ததி அனைத்து மட்டத்திலும் உயர்வடைய மத்திய அரசு தெளிவான, திடமான, தொலைநோக்குத் திட்டங்களை வகுத்திருக்கிறது. மீனவர்களின் வாழ்வுக்காக சிறிய, பெரிய மீன்பிடித் துறைமுகங்களை துறைமுகங்களை தாராளமாக வழங்கியும் வருகிறது.
மீன்பிடித் தொழிலில் மீனவர்களுக்காக சவால், வாழ்க்கைப் போராட்டம், சர்வதேச வர்த்தக கனவு அனைத்தையும் மத்திய அரசு புரிந்து வைத்திருக்கிறது. மீனவ மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு மத்திய அரசு வலிமையான திட்டங்களை வழங்கும் முன்னெடுப்புகளில் இறங்கியுள்ளது.
மேலும், சுனாமிக்குப் பிறகு கடலோர மீனவர்கள் அச்சமின்றி வாழ்வதற்காக நிரந்தரக் குடியிருப்பு திட்டத்தையும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் நடைமுறைப் படுத்தும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மீன்வளத்துறை செயலர் டாக்டர் மணிகண்டன் பேசுகையில்,
''புதுச்சேரி மாநிலத்தில் விவசாயத்துக்கு ஈடாக மீன்பிடித் தொழில் விளங்கி வருகிறது. அந்தமான் தீவில் மீன்பிடி அளவை விட புதுச்சேரியில் 4 மடங்கு மீன்பிடித் திறன் வளர்ந்திருக்கிறது.
இதை நன்கு புரிந்து வைத்திருக்கிற மத்திய அரசு மீன்பிடித்து தொழிலை உன்னதமான தொழிலாக உயர்த்த தொலை நோக்குத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது.
அதற்க்கு முன்னெடுப்பாகத்தான் புதுச்சேரிக்கு மத்திய அரசானது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மூலமாக புதுச்சேரிக்கு BOBP என்று அழைக்கப்படும் இந்திய பெருங்கடல் திட்ட அதிகாரிகளை அனுப்பியுள்ளது.
தொடர்ந்து டெல்லியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்களின் மீன்பிடித்து தொழிலில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை எடுத்துரைத்தார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் 200 கடல் மைல் வரை சென்று மீன்பிடிக்க வசதியாக சர்வதேச தரம் வாய்ந்த ரூ.2 கோடி மதிப்புள்ள படகுகளை வழங்கும் வரைவு தயாராகி வருகிறது. புதுச்சேரி, காரைக்கால் மீனவர்களுக்கு வழங்கப்பட இருக்கிற இந்தப் படகுகளில் கண்காணிப்பு கருவிகள், நடுக்கடல் மீன்பிடி சாதனங்கள், பதப்படுத்தும் வசதிகள் காணப்படும்.
மேலும், மீனவர்கள் மீன்களைக் கடலிலிருந்து கரைக்கு கொண்டு வரும் அவகாசத்தில் பொருளின் தரம், விலை மாறும் அபாயமும் உள்ளது. அதனால், மீனவர்கள் பிடிக்கிற மீன்களுக்கு தரவாரியாக நடுக்கடலிலிருந்தே மீன்களின் விலையைத் தீர்மானிக்கிற சந்தை வசதியும் இந்த படகுகளில் இருக்கிறது.
இந்த வசதியால், மீன்களை மதிப்புக் கூட்டி, சர்வதேச சந்தையில் மீனவர்களால் விற்கவும் முடியும். சர்வதேச தரம் வாய்ந்த ரூ.2 கோடி மதிப்பிலான இந்த படகுகளில் மீனவ பெண்களும் நடுக்கடலுக்கு செல்ல முடியும். அதற்காக இலங்கை அரசுடன் இந்திய வெளிவுறவுத் துறை அமைச்சகம் மூலம், பேசப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அமலுக்கு வரும் முன்பே, மீனவர்களும், பெண்களும் முன்கள பயிற்சிக்காக கன்னியாகுமரி மாவட்டம், பெண்களுக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஆழ்கடலில் மீன்பிடித்தல், பதப்படுத்துதல், மதிப்புகூட்டல், சந்தைப் படுத்துதல் பயிற்சிகளும் வழங்கப்படும்
இதற்க்கு அச்சாரமாக காரைக்காலில் ரூ.130 கோடி மதிப்பில் பொலிவுறு துறைமுகத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அதற்கான நிலமும் கையகப்படுத்தப் பட்டுள்ளது. சுற்றுச் சூழல், மீனவர்கள் வாழ்க்கை பாதிக்காமல் இந்தத் துறைமுகம் விரைந்து கட்டி முடிக்கப்படும். காரைக்கால் மீனவர்களின் வாழ்க்கை இதுவரை அனுபவ அடிப்படையிலேயே இருந்து வந்தது.
இனி மீனவர்கள் தங்கள் பிடிக்கிற மீன்களுக்கு நடுக்கடலிலேயே விலை நிர்ணயம் செய்ய முடியும். நடுக்கடலில் படகிலியிருந்தே மீன்களை ஏலம் விடலாம். கரை திரும்பும்போது அவர்களின் வாங்கி கணக்குக்கு மீன்களுக்குரிய சர்வதேச விலை ரொக்கமாக சேர்ந்திருக்கும். இவரும் மீன்வளத்துறை செயலர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
கான்பரன்சிங் மூலம் பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கூட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் எழுப்பி, தங்களில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
காரைக்கால் மீனவர்களுக்காக ரூபாய் 130 கோடியில் நிறுவப்பட இருக்கும் பொலிவுறு துறைமுகத் திட்டமானது நவீன தொழில்நுட்ப வழிகாட்டல் மூலம் மீன்பிடி சந்தை, வர்த்தகத்துக்கு நிரந்தர விடியலாக அமையும்.

Related News