காரைக்காலில் நாய்கடிக்கு
தேர்தல் அதிகாரி படுகாயம்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிதா ராட்டி நாய் கடித்து படுகாயமுற்றார். காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இஷிதா ராட்டி IAS ஆட்சியை அலுவலகத்தில் பணியில் இருந்துள்ளார்.
அப்போது அவர் வளர்க்கும் செல்ல நாய் எதிர்பாராத விதமாக கடித்தது. இதனால் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டதால், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை காரைக்கால் அரசு பொது மருத்துவமனை அதிகாரிகள் செவிலியர்கள் விரைந்தனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிதா ராட்டியின் காயத்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ரேபிஸ் நோய் தடுப்பு மருந்தினை இஷித்தா ராட்டிக்கு செலுத்தினர். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து ரேபிஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இஷிதா ராட்டி சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை , கண்காணிப்பு வசதிகள் நீடிப்பதாகவும் தெரிகிறது. இருந்தும் அவர் தேர்தல் பணிகளில் இடைவெளியின்றி ஈடுபட்டு வருகிறார்.