THAMBI MARIMUTHU
Aug 28 2025
கிரைம் ஏரியா
காரைக்காலில் ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைதாகி ஒரு வருடம் முடிந்து இரண்டாவது வருடம் தொடங்கும் வேளையில் போலீசார் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகள் இன்னும் இருக்கின்றனர். வழக்கில் சேர்க்கப்பட வேண்டிய சாட்சிகளும் உள்ளனர். கைப்பற்ற வேண்டிய பலகோடி சொத்துக்களும் இருக்கின்றன. பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டிய வசூல் தொகை குறித்த விவரங்கள் மர்மமாகவே நீடிக்கிறது.
மாவட்ட ஆட்சியரின் கையொப்பமிட்டு போலி பட்டாக்கள், போலியான ஸ்மார்ட்சிட்டி திட்ட உத்தரவு தயாரித்து ஸ்ரீ பார்வதி ஈஸ்வரர் கோயில் நிலத்தை மோசடியாக வரைபடம் தயாரித்து விற்கப்பட்ட வீட்டுமனைகளுக்காக பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி உள்ளனர்.
சுய உதவி குழுக்கள், அரசு ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், வருவாய் துறை ஊழியர்கள், மற்றும் ஹவாலா பேர்வழிகள் என வசூலிக்கப்பட்ட ரூபாய் பல கோடி பணம் யார் யாருக்கு பிரித்து தரப்பட்டது என்பதும் புரியாத புதிராக உள்ளது.
முதன்முறையாக காரியமுத்து புலனாய்வு வார இதழ் சார்பில் ஆவணங்களை சேகரித்து ஆதாரங்களை கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டோம். பல்வேறு அரசியல் அழுத்தங்கள், நெருக்கடிகள், நிர்பந்தங்கள், மிரட்டல்களுக்கு மத்தியில் உள்ளதை உள்ளபடியே காரை முரசு புலனாய் வார இதழிலும், karai Murasu சேனலிலும் செய்தியாக வெளியிட்டோம்.
ஒட்டுமொத்த மோசடி, ஊழல், முறைகேடு அனைத்தையும் ஊற்றி மூடி விட முயன்ற சக்திகள் வேறு வழியின்றி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் என கைது செய்தது.
ஆயினும் இது நடந்து ஒரு வருடத்தை கடந்து இரண்டாம் வருடத்தை தொடும் நேரத்தில் இன்னும் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசாரால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை. சாட்சிகள் ஒரு ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்தோம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத படி போலீஸ்சாருக்கு நாலாவது திசைகளிலும் அழுத்தம் தரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் கைது செய்ய வேண்டிய குற்றவாளிகள், சேர்க்கப்பட வேண்டிய சாட்சிகள், கைப்பற்ற வேண்டிய ரூபாய் பலகோடி சொத்துக்கள் மற்றும் ரொக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இது நடப்பு வழக்குடன் இன்னும் சேர்க்கப்படும் போது விவகாரத்தின் உண்மை வடிவம் தெரியவரும்.