சிபிஐயிடம் சிக்கிய டிஜிட்டல் டைரி!
.
புதுச்சேரியில் போலி மருந்து முதன்மைக் குற்றவாளி ராஜாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட அந்த டிஜிட்டல் டைரியில் புதுச்சேரியின் முதன்மை அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பெயர்கள் காணப்பட்டுள்ளன.
மேலும், சுகாதாரம், வணிகத்துறை, தொழில்துறை, மின்துறை, GST துறை அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது தவிர, புதுச்சேரியின் பணியாற்றும் IAS , IPS, PCS, IFS, அதிகாரிகளின் பெயர்களும் அந்த டைரியில் இடம் பெற்றுள்ளன.
இதுதவிர, அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசியல் பின்னணியில் கட்டைப் பஞ்சாயத்து செய்கிற நபர்களின் தொலைபேசி எண்கள், வங்கி கணக்குகள், G Pay எண்களும் காணப்படுகின்றன.
வழக்கின் ஆரம்பத்தில் இதுகுறித்த விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. தற்போது சிபிஐ, INA அதிகாரிகளிடம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், கைது நடவடிக்கை பாரபட்சமின்றி நடக்கும் எனது தெரிகிறது