Friday 25 09 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அமைச்சருக்கு கேட்!
அமைச்சருக்கு கேட்!
THAMBI MARIMUTHU Sep 23 2026 காரைக்கால்

அமைச்சருக்கு கேட்!

காரைக்கால் பட்டினச்சேரியில் நிகழ்ச்சி முடிந்து திரும்பிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் - அதானி துறைமுக சரக்கு ரயிலுக்காக ரயில்வே கேட்டில் அரை மணி நேரம் காத்திருப்பு - கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி!* காரைக்காலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று காரைக்கால் வந்திருந்தார். காரைக்கால் பட்டினச்சேரி மீனவ கிராம பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் போது, பட்டினச்சேரி ரயில்வே கேட் அருகே அவரது கார் நிறுத்தப்பட்டது. காரைக்கால் அதானி சொந்தமான தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் காரைக்காலில் இருந்து வாஞ்சரில் உள்ள துறைமுகம் நோக்கி செல்வதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால் அமைச்சரின் கார் சுமார் அரை மணி நேரம் ரயில்வே கேட்டில் காத்திருந்தது. வெயில் நேரத்தில் நீண்ட நேரமாக கேட் திறக்கப்படாமல் இருந்ததால், அமைச்சருடன் வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தினம் தோறும் 10-க்கும் மேற்பட்ட முறை நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் வந்து செல்வதால், காரைக்கால் நகர பகுதியில் உள்ள மூன்று ரயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்படுகின்றன. இதனால் காரைக்காலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவசரத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கூட இந்த ரயில்வே கேட்டில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது உள்துறை அமைச்சரே சரக்கு ரயிலுக்காக காத்திருந்த சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே காரைக்கால் நகர பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Related News