Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

டபுள் டிராக்' அரசியல் மாற்றம்!
politricks I PUDUCHERRY IKARAIKAL NORTH
OUR SPECIAL TEAM Aug 28 2025 புதுச்சேரி அரசியல்

டபுள் டிராக்' அரசியல் மாற்றம்!

#pondicherry #politricks-1 


காரைக்கால் வடக்குத் தொகுதி  

'டபுள் டிராக்' அரசியல் மாற்றம்!

   

காரைக்கால் வடக்கு சட்டமன்ற தொகுதி வித்தியாசமான அரசியல் கட்டமைப்பை கொண்ட தொகுதியாக விளங்கி வருகிறது. கடந்த காலங்களில் பார்த்த அதே முகங்களை பார்த்து சலிப்போடிருக்கும் இத்தொகுதி மக்கள் புதியவர்களை கொண்டாடும் மன ஓட்டத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றனர். இதனால், வடக்குத் தொகுதியின் அரசியல் நிலவரம் 'சுவாரஸ்யமான கலவரமாக' மாறியிருக்கிறது.


இந்த காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் M.O.H.பாரூக் மரைக்காயரின் ஆரம்ப அரசியல் நாற்றங்காலாக விளங்கியது. அவருக்குப்பின் வடக்கு தொகுதியின் அசைக்க முடியாத இரும்புத் துணாக விளங்கியவர் புதுச்சேரி மாநில திமுக காரைக்கால் அமைப்பாளரும், முன்னாள் அமைச்சரும் தற்போதைய தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம். 


தற்போது தெற்கு தொகுதியில் வலுவான அரசியல்வாதியாக நீடிக்கக்கூடிய ஏ.எம்.எச்.நாஜிம் எம்.எல்.ஏ - வின் ஆணிவேர் வடக்கு சட்டமன்றத் தொகுதி என்று வர்ணிக்கின்றனர். காரணம் கிளைகள் தெற்குத் தொகுதியில் அசைந்தாலும், நாஜிமின் வலுவான வேர்ப்பகுதி, வடக்குத் தொகுதியில்தான் பறந்து விரிந்திருப்பதாக தி.மு.கவினர் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். 


வடக்கு தொகுதியில் அவருக்கு செல்வாக்கு இன்னும் குறையாமல் நீடித்து வருவதை இத்தொகுதியில் நாஜிமுக்கு நீடிக்கும் செல்வாக்கும், வரவேற்பும் நிரூபித்து வருகின்றன. காங்கிரசின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் காரைக்கால் வடக்குத் தொகுதி, இக்கட்சியின் மாவட்ட தலைவர் ஆர்.பி.சந்திரமோகனால் செழிப்பாக வளர்ந்து நிற்கிறது. 2016  சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் கட்சியின் வேண்டுகோளால் வேட்பாளராக போட்டியிட்டவர் ஆர்.பி.சந்திரமோகன். 


கட்சிக்காக வசூலிக்காமல், கட்சித் தலைமையிடம் நிதியை எதிர்பார்க்காமல் சந்திரமோகன் சொந்தக் காசை செலவு செய்து கட்சிப்பணியையும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருவதாக காங்கிரசார் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.  தேர்தலில் சீட்டுக்காக அரசியல் செய்யும் காலத்தில், தனக்கு சீட் வேண்டாம், நல்லவர்களுக்கு கொடுங்கள் என்று தலைமையைக் கேட்டுக் கொண்ட அதிசய தலைவராக சந்திரமோகன் விளங்கி வருகிறார். 


காரைக்கால் வடக்குத் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கடந்த முறை போட்டியிட்ட முன்னாள் புதுச்சேரி அமைச்சரும், முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஏ.வி. சுப்பிரமணியன் வெற்றி வாய்ப்பு சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் கை நழுவியது. காரணம், கடைசி நேரத்தில் தலைமை இவரை வேட்பாளராக அறிவித்ததுதான். ஒரு மாதம் முன்பு தேர்தலில் களம் இறங்கி இருந்தால் கூட இவர் வெற்றி பெற்றிருக்க கூடும்.


நல்ல மனிதர், பண்பானவர், பொறியாளர், ஒழுக்கம் மிக்கவர், எளியவர் என்று பொதுமக்களின் பாராட்டுக்குரிய ஏ.வி.சுப்பிரமணியன் தோல்விக்குப் பின்னரும் காரைக்கால் வடக்குத் தொகுதி பிரச்னைகளில் தலையிட்டு, பொதுமக்களின் பிரச்னைகளுக்காக குரல் தந்தும், போராடியும், தீர்த்து வைத்தும் வருகிறார். அரசு ஊழியர்கள் மட்டத்தில் ஏ,வி,சுப்பிரமணியனுக்கு மிக நல்ல மரியாதையை நீடிப்பது மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கிற வலுவான செல்வாக்குக்கு அச்சாணியாக நீடிக்கிறது.


பழகுகிற மனிதர்களிடம் பாசத்தைக் கொட்டுகிற மீனவ மக்கள், கை நீட்டி அரவணைத்தால், கண்ணைப்போல் நம்புகிற ஆதி திராவிட மக்கள் ஏ.வி.சுப்பிரமணியன் மீது அளப்பரிய அன்பினை பொழிந்து  வருகின்றனர். கடந்த 2021 தேர்தலில் இவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லையே என்கிற ஆதங்கம், வருத்தம் அது தொகுதி மக்களிடம் இருக்கிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த இழப்பினை வடக்குத் தொகுதி மக்கள் சமன் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இத்தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் படித்த இளைஞரும், தொழிலதிபரும், கலகலப்பாக பழகக்கூடிய வருமான பிரபு என்கிற பிரிதிவிராஜ் திமுக முக்கிய புள்ளியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நாஜிம் எம்.எல்.ஏ பரிந்துரையின்படி புதுச்சேரி மாநில தி.மு.க. விவசாய அணியின் அமைப்பாளர், மற்றும் காரைக்கால் வடக்கு சட்டமன்ற தி.மு.க. பொறுப்பாளராக இரட்டைப் பதவி தந்து இவரை கௌரவித்திருக்கிறது கட்சித் தலைமை.


நாஜிம் எம்எல்ஏ தெற்கு தொகுதியில் தடம் பதித்தது முதல், வடக்குத் தொகுதி மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தற்போது  பிரபு என்கிற பிரிதிவிராஜுக்கு ஆதரவையும், உற்சாகத்தையும் அளித்து வருகின்றனர். நாஜிமின் மனசாட்சி என்று இளைஞர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். மக்கள் உரிமைகளுக்கான அத்தனை போராட்டத்திலும் பிரிதிவிராஜ் பங்காற்றி தொகுதி மக்களின் பாராட்டினை பெற்று வருகிறார். 


திமுக சார்பில் வலுவான பிரதிநிதி என்கிற வடிவத்தை பெற்றிருக்கிற பிரிதிவிராஜ் எம்.எஸ்.சி கணிப்பொறி விஞ்ஞானம் (M.Sc., computer science) படித்த முதுகலை பட்டதாரியாவார். இவர் மூலம் தொகுதி முழுக்க இளைஞர்கள், பெண்கள் பல்வேறு நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் பணியாற்றி வருகின்றனர். காரைக்கால் வடக்குத் தொகுதியின் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், சிறு வியாபாரிகள், மீனவ மக்களின் பேரன்பினை பெற்ற இளம் தலைவராக பிரிதிவிராஜ் வலம் வந்து கொண்டிருக்கிறார். 


''பிரிதிவிராஜைத் தவிர காரைக்கால் வடக்குத் தொகுதியில் தற்போது 'ட்ரெண்டில்' இருக்கும் இளம் தலைவர் யார்?'' என்று கேட்டால் இளைஞர்கள் ஒரே ஒருவரை நோக்கிக் கை நீட்டுகின்றனர். சாதி சமய இன ஆச்சரியங்கள் இன்றி, அனைவரையும் தேடிச்சென்று கைகூலிக்கு கட்டித்தழுவி சந்தித்து அளவாவி மகிழ்கின்ற துடிப்பான இளைஞராக ஏ.எம்.ரஞ்சித் விளங்குகிறார். 


காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸின் சுறுசுறுப்பான தலைவராக விளங்குகிற ஏ.எம்.ரஞ்சித், ஒரு பி.டெக் பட்டதாரி. இவரைச் எப்போதும் மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் வலம் வந்தபடி உள்ளனர். சிரித்த முகத்தோடு, எளிதாக பழகி ஏழை, எளிய மக்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ரஞ்சித், அன்னதானம், ஆன்மிகம், சுப நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். மேலும், தொகுதியில் எங்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், தவறாமல் அங்கு ஆஜராகி, ரொக்கம், நினைவுப் பரிசுகளை வழங்கி, விளையாட்டு வீரர்களின் அடையாளத் தலைவராக பிரகாசிக்கிறார். 


ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பசியை உணர்ந்த இவர், வேலையற்ற இளைஞர்களின் உணர்வினைப் புரிந்து, பிழைப்புக்கான வழியையும் ஏற்படுத்தி தருகிறார். அடிப்படையில் விவசாய குடும்பததைச் சேர்ந்த ரஞ்சித் அவ்வப்போது விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு தேவையான அத்தனை வழிகாட்டலையும் அளித்தும் வருகிறார். பகல் பொழுது முழுவதும் வடக்குத் தொகுதியிலேயே உணவு உண்டு தொண்டர்களுடன் வலம் வரும் ரஞ்சித் சர்வ கட்சியினரிடமும் இணக்கத்தோடு பழகி வருகிறார். 


மேலும், அனுபவம், தகுதி, முதிர்ச்சி மிக்க தலைவர் ஆன முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ. வி.சுப்பிரமணியன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் பி சந்திரமோகன் மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைகளை பெற்று களமாடி வருகிறார் இளைஞர் ஏ.எம்.ரஞ்சித். 


காரைக்கால் வடக்கு தொகுதியின் திருமணம், காதணி, திருவிழா, கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் இளைஞர் ஏ எம் ரஞ்சித்தின் படங்களோடு ஆர்ப்பரிப்பான இளைஞர்கள் பலரது முகங்கள் தென்படுகின்றன. தினமும் காரைக்கால் வடக்கு தொகுதியில் பெரும்பாலான நேரத்தை செலவிடும் ஏ.எம்.ரஞ்சித் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில், ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே காணப்படுவார் என அவரோடு பயணிக்கும் இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர். 


ஆக மொத்தத்தில் காரைக்கால் வடக்கு தொகுதியில் நாலாவது திசைகளிலும் இந்தியா கூட்டணி சார்பில் இளைஞர்கள் ஆவேசமாக காலத்தில் குதித்து பொதுமக்களின் மனங்களில் இடம்பெற்று வருகின்றனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்த ஏவி சுப்பிரமணியன், ஏ.எம்.எச் நாஜிம் இணைந்து செயல்படுகின்றனர். 


இருவரும் சமீபகாலமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்று வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏவிஎஸ் வெற்றிக்காக நாஜிமும், நாஜிம் வெற்றிக்காக ஏவிஎஸ்ஸும் வலுவான அடித்தளம் அமைத்து முடித்துள்ளனர். இருவரின் புரிதலை உணர்ந்த இந்தியா கூட்டணித் தொண்டர்கள் உற்சாகத்துடன் களமாடி வருகின்றனர்.


இருவரும் இணைந்தே கடந்த 4 வருடங்களாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக செயல்படுத்தி வரும், "டபுள் டிராக்" அரசியல் மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 40 வருட அரசியலில் காரைக்கால் வடக்கு சட்டமன்ற தொகுதி வித்தியாசமான தேர்தல் களத்தை சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


-காரை முரசு டீம்.