Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பாஜகவுக்கு பைபை! -ரங்கசாமி முடிவு!
#PUDUCHERRY POLITICS
AP.Narendraa Sakthivel Oct 27 2025 புதுச்சேரி அரசியல்

பாஜகவுக்கு பைபை! -ரங்கசாமி முடிவு!

புதுச்சேரியில் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியைப் பிடித்தது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்ந்த ஒரு அரசு புதுச்சேரியில் அமையுமானால் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் நல்ல புரிதல் இருக்கும். அதன் மூலம் நல்ல நல்ல மக்கள் நலத் திட்டங்களை புதுச்சேரியில் அமல்படுத்தலாம். மத்திய அரசின் நிதியும் தாராளமாக கிடைக்கும். மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தங்கு தடையின்றி வழங்க முடியும். மேலும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசு அமைந்தால் நிச்சயமாக தனி மாநில அந்த செய் பெற்றுத் தர இயலும். அதன் வாயிலாக சுய சார்புள்ள ஒரு மாநிலமாக புதுச்சேரி அரசு திகழும் என்றெல்லாம் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி பிரச்சாரம் செய்தார். அதை நம்பி புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தனர். வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த உடனேயே முதல்வர் ரங்கசாமிக்கும் பாஜகவுக்கும் பஞ்சாயத்து ஆரம்பித்தது. அமைச்சர் ஒதுக்கீடு, அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு விஷயங்களில் கருத்து மோதல்கள் தொடங்கின. முதல்வர் பதவிக்கு குறிவைத்த பாஜகவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததால், துணை முதல்வர் பதவியை கோரியது.

அதற்கு ஒப்புக் கொள்ளாத முதல்வர் ரங்கசாமி பாஜகவுக்கு துணை முதல்வருக்கு நிகரான உள்துறை அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி, குடிமைப்பொருள்.மற்றும்.நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பதவியை வழங்கினார்.

 இருந்தும் அதில் திருப்தி அடையாத பாஜக தொடர்ந்து முடிவ ரங்கசாமிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது. இதனால் எரிச்சல் அடைந்த முதல்வர் ரங்கசாமி அவ்வப்பொழுது பாஜக பொறுப்பாளர் சந்தோஷ் ஜி மற்றும் நிர்மல் குமார் சுனானாவை வரவழைத்து கண்டித்தபடி இருந்தார். ஆனால் தான் நினைத்ததை எப்படியும் சாதித்து விட வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருந்தது. அதற்காக சில நேரம் எகிறிப் பாய்ந்தும், பல நேரம் குனிந்து பணிந்தும் முதல்வர் ரங்கசாமியை கையாண்டு வந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குறுதி அளித்தபடி உள்ளாட்சி தேர்தலையும் நடத்தாமல் ஜவ்விழுத்தபடி வந்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. இப்படியாக பாஜகவை ஒரு வழியாக சமாளித்து 4 வருடங்களை கஷ்டப்பட்டு நகர்த்தினார் முதல்வர் ரங்கசாமி.  ஆட்சியின் இறுதி கட்டத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவு தெரிவிக்கிற சுயேச்சைகளை கழற்றி சில பாஜக எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து தனி அணியை உருவாக்கியது பாஜக. 

முதலில் இது எதார்த்தமாக நடப்பதாக எண்ணிய ரங்கசாமி, கூட்டணியில் இருந்த தற்போதைய அமைச்சர் ஜான்குமாரின் நடவடிக்கைகளை பார்த்த போது அவருக்கு வினோதமாகப்பட்டது. ஆட்சிக்கு எதிராகவும் அமைச்சர்களுக்கு எதிராகவும் அவ்வப்போது குரல் கொடுப்பதும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதுமாக இந்த அணி இருந்தது.. இன்னொரு புறம் என்ன காங்கிரசை உடைக்கும் வேலையிலும் பாஜக இறங்கியதை முதல் ரங்கசாமி உணர்ந்தார். இதற்குமேல் பொறுத்திருக்க முடியாது என முடிவு செய்த ரங்கசாமி, தனக்கே உரித்தான பாணியில் பாஜகவை கையாண்டார். ஜான் குமார் தலைமையிலான ஜோஸ் மார்ட்டின் அணியை உடைப்பதற்கு ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி ரங்கசாமி வழங்கினார். ஆனாலும் இலையை போட்ட ரங்கசாமி, அதன் மேல் பிரியாணி சட்டியை கவிழ்த்து விட்டார். எலியும் போட்டு வெறும் சட்டியையும் ரங்கசாமி வைத்ததை பார்த்து ஜான்குமார் அதிர்ச்சி அடைந்தார்.  ஜான் குமரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, முதல்வர் தனக்கு எப்படியும் நிலாக்களை ஒதுக்குவார் என்று சொல்லி வந்தார். அதற்கான அறிகுறி ஏதும் இல்லாத நிலையில், "இலாகா ஒதுக்கித்தான் என்ன செய்யப் போகிறேன்?" -இன்று விரத்தியோடு புலம்பினார். ஒரு பக்கம் முதல்வர் ரங்கசாமியோடு இணக்கமாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்டு மறுபக்கம் அவருக்கு குழி வெட்டிக் கொண்டிருந்த பாஜகவுக்கு சரியான அடியாக கொடுத்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. ஜான்குமாரை அமைச்சர் பதவி கொடுத்து அமைதிப்படுத்திய முதல்வர் ரங்கசாமி, லாட்டரி உரிமையாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முகத்திரையை கிழித்தார். ஜான் குமார் தன்னோடு இருக்கிறார் என்பதை சொல்ல முடியாமலும், இல்லை என்று உறுதிப்படுத்த முடியாமலும் ஜான் குமாரின் மகனோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் லாட்டரி வியாபாரி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். அதேபோல் சத்யமூர்த்தி ஐஏஎஸ் ஐ கையில் வைத்துக் கொண்டு மாநில துணை நிலை ஆளுநர் செய்கிற அரசியல் சதுரங்கம் ரங்கசாமிக்கு அதிகபட்ச எரிச்சலை ஊட்டியது .

இப்படியே பரமபதம் விளையாடிக் கொண்டிருந்தால் கதைக்காகாது  என்று நினைத்த முதல்வர் ரங்கசாமி, தனது அதிர்ச்சியை பாஜக தலைமையிடம் அடித்து சொல்லிவிட்டார். இனி கூட்டணி வேலைக்காகாது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் எங்கள் வேலையை எங்களை பார்க்க விடுங்கள் என தெள்ளத் தெளிவாக கூறிவிட்டாராம். தங்களின் பிரித்தாலும் வேலையை ரங்கசாமி உணர்ந்து கொண்டார் என்பதை  புரிந்து கொண்ட  பாஜக , ரங்கசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது.

AP.Narendraa Sakthivel