Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

புதுச்சேரி கதிர்காமத்தில் KSP ரமேஷ் போட்டி!
புதுச்சேரி கதிர்காமத்தில் KSP ரமேஷ் போட்டி!
Thambi Marimuthu Feb 03 2026 புதுச்சேரி அரசியல்

புதுச்சேரி கதிர்காமத்தில் KSP ரமேஷ் போட்டி!

புதுச்சேரி கதிர்காமத்தில் KSP ரமேஷ் போட்டி!


புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் மனசாட்சி என்று அழைக்கப்படுகிற கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., மீண்டும் கதிர்காமம் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். அவருக்கு முதல்வர் ரங்கசாமி கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தெரிகிறது. 


புதுச்சேரி இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் முதல்வர் ரங்கசாமிக்கு அடுத்து ஒரு பெயரை உச்சரிக்கின்றார்கள் என்றால்,அந்த பெயர்தான் KSP.ரமேஷ் என்கின்ற அந்த மூன்று எழுத்து மந்திரம். தனது இளமை காலத்தில் அதாவது 1990-1991 காலகட்டங்களில் அரசியலில் தடம் பதிக்க தொடங்கிய கே.எஸ்.பி.ரமேஷ் முதல்வர் ரங்கசாமியுடன்  துடிப்புடன் கொடி பிடித்து வலம் வந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 


அந்த காலகட்டங்களில் முதல்வர் ரங்கசாமி என்ன நினைக்கின்றாரோ அதை அப்படியே செயல் வடிவமாக கொடுத்து ஆற்றலும் வல்லமையும் கொண்டவர் KSP ரமேஷ். அப்போது ரங்கசாமி உடன் காங்கிரஸ் கட்சியின் பயணித்த ரமேஷ் மாணவர் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் என அனைத்திலும் மாநில முக்கிய பதவி வகித்தார்.


2008 ஆம் ஆண்டு ரங்கசாமியின் முதல் பதவியை காங்கிரஸ் கட்சி பறித்தபோது, அப்பொழுது மாநில முழுவதும் ஸ்தம்பிக்கும் அளவில் போராட்டங்களை நடத்தி காங்கிரஸ் தலைமைக்கு பெரும் எதிர்ப்பை காட்டினார்.


அதன் பிறகு 2010 ஆண்டு முதல்வர் ரங்கசாமியின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு அறுபது ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன்  இலவச திருமணம் நடத்தி, புதுச்சேரி தமிழகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு மிக பிரம்மாண்டமான விழா நடத்தினார். அதன் பிறகு ரங்கசாமியின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து என்.ஆர்.பாசறை தொடங்கினார். 


புதுச்சேரியில் முதல்வர் என்.ஆர்.காங்கிரஸ் தொடங்க முக்கிய காரணமாக விளங்கிய கே.எஸ்.பி.ரமேஷ், தொடர்ந்து அக்கட்சி ஆட்சியைப் பிடிக்க அடித்தளமாக விளங்கினார். 


அதன் விளைவாக 2011-2016 ஆட்சியில் அமர்ந்தவுடன் மிக முக்கியமான வாரியம் ஆன நகர அமைப்புக்குழுவின் தலைவராகிய முதல் அரங்கசாமி அழகு பார்த்தார்.. அதன் பிறகு முதல்வரின் ரங்கசாமி இடமிருந்து சிலர் சூழ்ச்சி செய்து KSP ரமேஷை பிரித்தனர். ரமேஷின் உண்மையான உழைப்பை உணர்ந்த முதல்வர் ரங்கசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் கதிர்காமம் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கினார்.


முதலில் வாய்ப்பை ஏற்றுக்கொண்ட மக்கள் அவரை வெற்றி பெற செய்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினர். அத்துடன் நிற்காமல் தனது அடுத்தபடியாக மாநில மக்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் வழி நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்களை ஒன்றிணைக்க என்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி தலைவராக நியமனம் செய்தார்.


முதல்வரின் நம்பிக்கை வீணடிக்காமல் மாநில முழுவதும் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து தற்போது மாநிலத்தில் ரங்கசாமிக்கு என்ன தனி ஒரு இளைஞர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இப்படி அரசியலில் ஒவ்வொரு நகரும் தனது கடின உழைப்பால் கட்டமைத்துக் கொண்ட கே.எஸ்.பி.ரமேஷுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் முதல்வர் ரங்கசாமி வாய்ப்பு வழங்குவார் அக்கட்சியின் பிரபலங்கள் என உறுதியாகக் கூறுகின்றனர்.