Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

சுரண்டல் லாட்டரி-சுரண்டும் அரசியல்!
சுரண்டல் லாட்டரி-சுரண்டும் அரசியல்!
THAMBI MARIMUTHU. Oct 09 2025 புதுச்சேரி அரசியல்

சுரண்டல் லாட்டரி-சுரண்டும் அரசியல்!

புதுச்சேரியில்
சுரண்டல் லாட்டரி-சுரண்டும் அரசியல்!
பூர்வீகம் பர்மா. கோவையில் அடைக்கலம். ஹோட்டலில் பணி. சின்னதாய் லாட்டரி தொழில். இந்தியா முழுவதும் சொத்துக்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் நீதிமன்றப் பிணைகள்.
மருமகன் ஆதவ் அர்ஜுன் திமுக, விடுதலை சிறுத்தைகள், என்று பயணித்து தற்போது த.வெ.க. கரூர் சம்பவத்தில் ரொம்ப பிசி! மகன் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் தனது முன்னாள் புதுச்சேரி லாட்டரி ஏஜென்ட்டும், இன்றைய இலாகா இல்லாத அமைச்சர் ஜான் குமாருடன் அரசியல் எண்ட்ரி!
தொடர்ந்து காமராஜர் நகர், முதலியார் பேட்டை, பாகூர் தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் போர்வையில் 2026 தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் பிசி!
புதுச்சேரி அரசியலில் தடம் பதித்துள்ள பிரபல லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டின் குறித்த ட்ரைலரை உள்ளூர் அரசியல்வாதிகள் மக்கள் நடுவே ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் சார்லஸ் மார்ட்டினுக்கு என்ட்ரி கொடுத்த ஜான் குமார் நிலாக்கள் இல்லாத அமைச்சராக அமைதி காக்கிறார். ஜான் குமார் சார்பில் அவரது மகன் ரீகன் ஜான்குமார் லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டின் உடன் வலம் வருகிறார்.
சார்லஸ் மாற்றி எனக்கு ஆதரவு கொடுத்த சுகிச்சைகள் ஒவ்வொன்றாய் சைலன்ட் மோடுக்கு போய்விட, அங்காளன் எம்.எல்.ஏ., மட்டும் பேச்சுத் துணைக்கு கூட மாட சென்று வருகிறார்.
புதுச்சேரியில் என்னென்ன செய்தால் அரசியலில் இறங்கலாம். எதை எதைப் பேசினால் மீடியாக்களில் இடம் பெறலாம். யாரை பிடித்தால் கிளை கட்சி அலுவலகம் திறக்கலாம் என்று சார்லஸ் மாட்டிகினுக்கு யோசனை கூறுவதற்கு என்று "மதியாலோசனை" கூறுவதற்கு, நவக்கிரகங்கள் போல சிலர் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆக மொத்தம் சார்லஸ் ஆரம்பித்த இயக்கம் "டெய்லி பேட்டா" முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சார்லஸ் பார்த்தேனும் எந்த இடத்தில் எதை பேசுவது என்று தெரியாமல், நடிகர் விஜய் போலவே யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுப்பதை ஆங்காங்கே பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சாக்கடை, குப்பை, சட்டம் ஒழுங்கு, ரெஸ்டோ பார், கஞ்சா விற்பனை, தொடர் படுகொலை என்று முதல்வர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு எதிராக எழுதி தரப்பட்ட சார்லஸின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. லட்சியம் 15, நிச்சயம் 10 என்ற இலக்கோடு ஒரு மாய சக்தி சார்லஸ் மாட்டினை புதுச்சேரியில் வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறது.
தினமும் பேக்கேஜிங் முறையில் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், தற்காலிக நிவாரண அடிப்படையில் திறக்கப்படும் கிளை அலுவலகங்கள் அரசியல் என்று நினைத்து சார்லஸ் "ஏதோ செய்கிறார்" என்று மட்டும் பொதுமக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.
முதலியார்பேட்டை ஏஎஃப்டி மில்லை தன்னிடம் குத்தகைக்கு தந்தால் அந்த மில்லை இயக்குவதாக ஆரம்பத்தில் முதலியார்பேட்டை கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார். இப்போது அது குறித்து பேசுவதில்லை. அடிப்படையில் மண்ணின் மைந்தர் கிடையாது. புதுச்சேரி லாட்டரி ஏஜென்ட் மூலம் அரசியலில் களம் இறங்கி சோபிப்பது என்பது எளிதான காரியம் அல்ல.
சார்லஸ் மாத்தி எனக்கு வேறு ஏதோ பிரச்சனை. அதிலிருந்து தப்பிக்கவும், அதை திசை திருப்பவோ புதுச்சேரியில் சமூக சேவகர் அவதாரம் எடுத்து, அரசியல்வாதியாக நடமாடிக் கொண்டிருக்கிறார் என்ற கருத்துக்களும் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. தனது அரசியல் பயணம் குறித்து, சார்லஸ் தெளிவான அஜெண்டாவை புதுச்சேரி மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
என்னதான் சார்லஸ் மார்ட்டின் நடவடிக்கைகளை ஓர கண்ணால் பார்த்தபடி கடந்து போனாலும் புதுச்சேரியின் சர்வ கட்சி அரசியல் தலைவர்களுக்கு ஒரு கிலியை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார் சார்லஸ் மார்ட்டின்.
புதுச்சேரியில் மோனோபோலி அரசியல் தலைவர்களான முதல் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளர் சிவா போன்ற தலைவர்கள் சார்லஸ் மார்ட்டினின் நடவடிக்கைகளை தடுக்க முடியாமல் பேரவஸ்தையில் நெளிகின்றனர். அவர் மூலம் உருவாகிற குடைச்சலை சகிக்க முடியாமல் முணுமுணுக்கின்றனர்.
புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கும் அஜெண்டாவுடன் மும்மரம் காட்டும் பாரதிய ஜனதா கட்சி சுயேச்சைகளுக்கு ஈடாக "கார்ப்பரேட் சுயேட்சை" சார்லஸ் மாட்டீனை களமிறக்கி விட்டிருக்கிறது. சார்லஸ் மார்ட்டின் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது என்றாலும், சில தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கும் வாக்குகளை பிரிப்பார்.
இது அனைத்து கட்சிகளுமே யோசிக்க கூடிய பொது "பேசு பொருளாகி" இருக்கிறது. புதுச்சேரியில் வெளியூர் காரர்கள் வந்து அரசியல் செய்யக்கூடாது என்பது இல்லை. பாதிக்கு மேல் தமிழகத்தில் இருந்து வந்தார் குடியாக புதுச்சேரியில் குடியேறியவர்கள் தான். இவர்களின் பூர்வீகத்தை தோண்டி எடுத்தால் அது தமிழகத்தின் வரைபடம் அல்லது ஆந்திராவின் வரைபடத்தில் போய் நிற்கும்.
புதுச்சேரியில் வாக்காளர்களை பொருத்தவரை யார் தேர்தலில் நிற்பது, யார் தேர்தலில் நிற்கக்கூடாது என்பது பெரிய விஷயம் இல்லை. யார் அதிகமான பணம், பரிசு, கூப்பன், குக்கர், துணிமணிகள், மளிகை சாமான்கள், பிரியாணி, மதுபானம் விநியோகிப்பார்கள் என்பதை உள்ளீடாக வைத்து பல தொகுதிகளில் முடிவெடுக்கின்றனர்.
நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான் குமார் வெற்றியின் ரகசியமாக இருக்கக்கூடிய பரிசு டோக்கன் திட்டம் சார்லஸ் மார்ட்டின் அரசியலுக்கு பிரம்ம சூத்திரமாக கை கொடுக்கும் என அவர் தரப்பு கருதுகின்றனர்.
இதுவரை புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டினை பிடிக்கவில்லை என்றால் ரங்கசாமி தலைமையிலான கூட்டணிக்கும், ரங்கசாமி மீது அதிருப்தி ஏற்பட்டால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது என்றும் வாக்காளர்கள் தங்களை வார்ப்பு செய்து வைத்திருந்தனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் மேற்கண்ட இரு தரப்பினரையும் சற்று தள்ளி வைத்து புதிய முடிவை எடுக்கக்கூடும். ஆக தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் புதிய வேட்பாளர்களை களம் இறக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த முறை எப்படியாவது தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக நிற்கிறது.
அதற்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு இந்தியா கூட்டணி முதல் ரங்கசாமி தலைமையிலான அணிக்கு தங்களது வெற்றி ஒருபுறம் இருந்தாலும், புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி இப்போது இருக்கிற நிலையை விட அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து விடக்கூடாது என்பதில் ஒருமித்த அலைவரிசையோடு வரும் தேர்தலை சந்திக்க கூடும்!
ஆக முதல்வர் ரெங்கசாமிக்கு இந்தியா கூட்டணி சிறந்த நட்பு எதிரி, பாஜக ஒரு வேலிகாத்தான் முள். சார்லஸ் மார்ட்டின் கோஷ்டி ஒரு "கரகாட்டக்காரன்" திரைப்பட குரூப்.
-Thambi Marimuthu.