Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

புதுச்சேரி தேர்தல் 2026
Dec 02 2025 புதுச்சேரி அரசியல்

புதுச்சேரி தேர்தல் 2026

புதுச்சேரியில் இதயப் பகுதியாக இருக்கும் நெல்லித்தோப்பு தொகுதி 

புதுச்சேரி உள்ளே நுழைய வேண்டும் என்றால் இந்த தொகுதியை கடந்து தான் நுழைய வேண்டும். அப்படி மையப்பகுதியாக உள்ள நிலைத்தொப்பு தொகுதி கடந்த காலங்களில் என்ன வளர்ச்சி அடைந்தது என்பதை நாம் விசாரித்த போது சொல்லும் அளவிற்கு எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை என்கின்றனர் அந்த தொகுதி வாசிகள்....


ஒரு காலத்தில் முதல்வர் தொகுதி என்ற அந்தஸ்தில் இருந்த நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ஜானகிராமன் நாராயணசாமி ஆகியோர் முதல்வராக பதவி வகித்துள்ளனர். இதில் ஜான் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஓம் சக்தி சேகர் இவர்கள் காலத்தில் மட்டுமே தொகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு சரியான வளர்ச்சியை கண்டது .


ஓம் சக்தி சேகருக்கு பிறகு அந்த தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜான் குமார் 3 மாதத்தில் நாராயணசாமி முதல்வராக தொடர ராஜினாமா செய்தார்..


அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாராயணசாமி முதல்வர் பதவியில் இருந்த காலகட்டங்களில் தொகுதிக்கு என சிறு துரும்பை கூட எடுத்து வைக்க அவரால் முடியவில்லை. காரணம் ஐந்தாண்டுகளும் ஆளுநருடன் மோதல் போக்கு, ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் செல்வது, ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு முன்பு ரோட்டில் படுத்து உறங்குவது என்றே அந்த ஐந்து ஆண்டுகளும் அவர் பொழுதே கழித்தார். 


அப்பொழுது நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் வியாபாரிகள் மீது பலமுறை இடிந்து விழுந்ததை தொடர்ந்து உடனடியாக புதிய மீன் அங்காடியை கட்டிக் கொடுக்க வேண்டும் என  வியாபாரிகள் சாலை மறியல் செய்ததை தொடர்ந்து அப்போது முதல்வராக இருந்த நாராயணசாமி புவன்கரே வீதியில் தற்காலிகமாக மீன் அங்காடியை மாற்றி பழைய மீன் மார்க்கெட்டை இடித்தார். அதன் பிறகு அவர் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்காமல் தனது பதவி காலத்தை முடித்துவிட்டு சென்றுவிட்டார். 


அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அந்த தொகுதியில் வெற்றி பெற்ற ரீச்சாட் ஜான் குமார் தொகுதி எது வரை உள்ளது என்று கூட தெரியாமல் தனது தந்தையார் நிழலிலேயே வெற்றி பெற்றுவிட்டு சென்றுவிட்டார் தற்பொழுது அவரால் தொகுதிக்கு எந்த பயனும் இல்லை .. இடிக்கப்பட்ட மீன் மார்க்கெட்டை கூட ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு அவரால் கட்ட முடியவில்லை என்கின்றனர் தொகுதிவாசிகள்....

இதனால் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு தற்போது எதிர்ப்பு அலையே வீசுகின்றது இந்த அசாத்திய சூழலில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம் சக்தி சேகர் ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர்.


இதில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பாக நாராயணசாமியை போட்டியிடுவார் என ஒரு தகவல் பரவி வரும் சூழலில் பாஜக NR காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் ஓம் சக்தி சேகர் களமிறங்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர். இதில் OPS அணியில் உள்ள ஓம் சக்தி சேகர் சமீப காலமாக பாஜக உடன் நெருக்கம் காட்டி வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான் குமார் ஆதரவுடன் போட்டியிட்டால் நெருக்கடி அதிகம் என்கின்றனர் தொகுதி வாசிகள்...