Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

தேவூரன் செய்ய, திருவாரூரான் தண்டம்!
DEEPAVALI SCAM
Thambi Marimuthu Oct 27 2025 புதுச்சேரி அரசியல்

தேவூரன் செய்ய, திருவாரூரான் தண்டம்!

தேவூரன் செய்ய, திருவாரூரான் தண்டம்!  


கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி அலுவலகம் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள்,  பத்திரிகையாளர்கள், ஆதரவாளர்களுக்கு இனிப்பு, பட்டாசு வழங்கி வந்தனர். 

இந்த ஆண்டு இந்த கோப்புக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியானது. "அரசியல்வாதிகள் அரசியல் செய்யும்போது அவர்களின் சொந்த செலவில் இதை செய்யலாமே? எதற்கு அரசு பணத்தை எடுத்து, வாரி இறைக்க வேண்டும் என்ற முணுமுணுப்பும் ராஜ் நிவாஸ் காம்பவுண்டுக்குள்ளிருந்து கேட்டதாம். 

இந்த வருடமும் தீபாவளி பரிசுக்கான கோப்பு துணைநிலை ஆளுநர் அலுவலகம் போனது. உடனடியாக கோப்பு சுவற்றில் அடித்த பந்தாக திரும்பியது. 

இதற்க்கு முக்கிய கரணம் ஒன்றை முதல்வர் அலுவலக வட்டாரத்தை ஒட்டிய நபர்கள் கூறுகையில், கடந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு கொள்முதல் செய்ததில் அங்கிருக்கும் "ஸ்பான்சர்" அதிகாரி புகுந்து விளையாடி விட்டாராம். 

முதல்வர் அலுவலகத்திலிருந்து துணைநிலை ஆளுநருக்கு சென்ற தீபாவளி இனாம் கோப்பை கிண்டி, கிழங்கெடுத்தாராம் துணைநிலை ஆளுநரின் செயலர்! "கடந்த டந்த ஆண்டு வாங்கப்பட்ட பட்டாசுகள் அனைத்தும் எம்.ஆர்.பி. விலைக்கு பில் செட்டில் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பட்டாசுகள் வாங்கும்போது எம்.ஆர்.பி ரேட்டில் இருந்து 40 சதவீதம் குறைத்துதானே தொகை வழங்க வேண்டும்? பிறகு எதற்காக எம்.ஆர்.பி. விலைக்கு தொகை வழங்கியுள்ளீர்கள் என குறிப்பெழுதினாராம். 

இவ்விஷயத்தை முதல்வருக்கும் "ஸ்பான்சர்" அதிகாரி தெரிவிக்க வில்லையாம். காரணம் கடந்தாண்டு மட்டும் சுமார் ரூ. 8 சி அளவுக்கு "ஸ்பான்சர்" அதிகாரி சுருட்டியது முதல்வருக்கு தெரிய வாய்ப்பில்லை என்று கண் சிமிட்டுகிறது முதல்வர் அலுவலக ஊடக வட்டாரம்!